பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர்…2 மாதங்களுக்கு பின் மரணம்

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொறுத்த வேண்டிய நிலை இருந்த நிலையில், அவரது உடல் மாற்று உறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த முடிவு செய்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். டேவிட் பென்னட்டின் உயிரை காப்பாற்ற வேறு வழிகள் ஏதும் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினரும் இந்த முயற்சிக்கு சம்மதித்தனர்.

கடந்த ஜனவரி 7-ம் தேதி அதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளதோடு, உறுப்புகளுக்காக பதிவு செய்து காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால், இந்த முயற்சி மருத்துவ உலகில் மைல் கல்லாக பார்க்கப்பட்டது.  அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட்டின் இதயம் செயல்படத் தொடங்கிதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராக உள்ள வீடியோக்களை மருத்துவமனை வெளியிட்டது. 

இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 8-ம் தேதி டேவிட் பென்னட் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான உறுதியான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. பல நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டேவிட் பென்னட் உயிரிழந்தாலும் இந்த முயற்சி எதிர்காலத்தில் முழுமையான வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளதாக மேரிலாண்ட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது தந்தையை காப்பாற்றுவதற்காக மேரிலேண்ட் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக டேவிட் பென்னட்டின் மகன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | Medical Miracle: பன்றியின் இதயத்தை மனித உடலில் வைத்து அறுவை சிகிச்சை!!

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.