ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முன்னணி நிலவரப்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட்டில், பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி, மீண்டும் அமைக்கிறது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி கோவாவில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகித்தது. திரிணாமுல் 4 இடங்களிலும் மற்றவர்கள் 6 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தனர்.
கோவாவில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் தேவை. பாஜகவுக்கு தற்போது வரை 18 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவைப்படுகிறது.
இதனால் அங்கு பாஜக ஆட்சி பிடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில், கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை இன்று சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையை பாஜக தலைவர்கள் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவாவில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்றும், இந்த வெற்றியை கட்சித் தொண்டர்களுக்கு அர்ப்பணிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
#WATCH | Celebrations at BJP office in Bengaluru, Karnataka as official trends show the party sweeping elections in Uttar Pradesh, Uttarakhand, Goa and leading in Manipur. #AssemblyPolls2022pic.twitter.com/mwjZqO1Gro
— ANI (@ANI) March 10, 2022
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளதற்கு மத்தியில் பிரதமர் மோடி தலைமையும், மாநிலத்தில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தலைமையுமே காரணம் என்றும், மத்திய மந்திரியும், உத்தரகாண்ட் பாஜக மேலிட பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
நான்கு மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றியை அடுத்து, உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பாஜக தலைமை அலுவலங்கள் அருகே திரண்ட பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.