கீவ்: ரஷியா- உக்ரைன் நாடுகளின் மந்திரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்கான முயற்சியை துருக்கி எடுத்துள்ளது.
நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. பிப்ரவரி 14ந்தேதி தொடங்கிய போர் இன்றுவரை நீடித்து வருகிறது. இதற்கிடையில் உலக நாடுகளில் வலியுறுத்தல் காரணமாக 3 முறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த துருக்கி முயற்சித்து வருகிறது. அதன்பலனாக இன்று துருக்கியில் இன்று ரஷியா- உக்ரைன் மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்- உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் உள்ள அண்டாலியா நகருக்கு இருவரும் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மேவுலுட் கவ்சோக்லு இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி உடன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படுமா என்று உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.
முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஷிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸகாரோபோவா, இந்த போர் உக்ரைனின் இறையான் மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியதுடன், உக்ரைனில் சிக்கி உள்ள பொது மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.
ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. இதற்காக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன், இந்த பேச்சுவார்த்தைகள் சோகத்தைத் தடுக்கும் மற்றும் போர்நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள உதவும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.