இந்தியாவில் புதிதாக 4ஆயிரத்து 184 பேர் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் இந்திய மாநிலமான கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து 15ஆயிரம்து 459 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4Mapuj;J 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளdu;. இதில் அதிகபட்சமாக கேரளாவில் புதிதாக 1,421 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு 4 கோடியே 29 இலட்சத்து 80 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து15 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 554 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 இலட்சத்து 20 ஆயிரத்து 120 ஆக உயர்ந்தள்ளது.
தற்போது 44ஆயிரத்து 488 பேர் தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 2 ஆயிரத்து 474 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 179 கோடியே 53 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 18 இலட்சத்து 23 ஆயிரத்து 329 டோஸ்கள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 8 இலட்சத்து,73ஆயிரத்து,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 77.60 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.