கடந்த ஒரு மாதத்தில் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 17% சரிவினைக் காண்டுள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி குறியீடும் கூட 6% தான் சரிவினைக் கண்டுள்ளது.
இது சந்தையில் தொடர்ந்து பல கமாடிட்டிகளின் விலை உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், பல உதிரி பாகங்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?
தொடர்ந்து சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வந்த நிலையில், சப்ளை சங்கியிலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாங்கலாம்
இதனால் தொடர்ந்து பல்வேறு டாப் ஆட்டோ பங்கு விலையானது சரிவில் காணப்படுகிறது. இந்த பங்குகள் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆட்டோ பங்குகள் பலவும் நிறுவனத்தின் மோசமான வளர்ச்சியினால் சரிவினைக் காணவில்லை. தொடர்ந்து மூலதன பொருட்கள் பற்றாக்குறை, விலையேற்றம், கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட பல காரணிகளுக்கும் மத்தியில் சரிவினைக் கண்டுள்ளன.
அசோக் லேலண்ட்
கொரோனாவின் தாக்கத்தில் மீண்டு வந்து கொண்டு இருந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா பதற்றமானது மேற்கொண்டு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேபி மார்கன் அறிக்கையில், அசோக் லேலண்டின் இலக்கு விலையானது 135 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது தற்போது வணிக வாகன விற்பனையில் இழந்த சந்தையினை மீட்டுக் கொண்டுள்ளது. இது இந்த பங்கு விலைக்கு சாதகமாக அமையலாம். இதன் தற்போதைய பங்கு விலை நிலவரம் சற்று குறைந்து, 106.55 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது.
மாருதி சுசுகி
மாருதி சுசுகியின் மதிப்பீட்டினை அன்டர்வெயிட் (underweight) என்ற நிலையில் இருந்து (Neutral) என்ற நிலைக்கு, ஜேபி மார்கன் மதிப்பீட்டினை மாற்றியமைத்துள்ளது. இதன் விலை சமீபத்தில் 6525 ரூபாய் என்ற லெவலுக்கு மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது தற்போது 2.61% அதிகரித்து, 7187 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
மகேந்திரா & மகேந்திரா
மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் இலக்கு விலையானது 965 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சற்று அதிகரித்து, 736 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையாக 3800 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம் 2.26% அதிகரித்து, 3412 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
ஹீரோ மோட்டோ கார்ப்
இதே ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையானது 2640 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம் 1.31% அதிகரித்து, 2320.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்கு இலக்கானது 620 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது 1.25% அதிகரித்து, 562.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினை ஓவர்வெயிட் (Overweight) ஆக வே தொடருவதாகவும், இதன் இலக்க்கு விலை 515 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை நிலவரம் 3.26% அதிகரித்து, 419.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
Nifty Auto index falls 17% on a month: JP Morgan suggests top auto shares to buy
Nifty Auto index falls 17% on a month: JP Morgan suggests top auto shares to buy/படு வீழ்ச்சி கண்ட நிஃப்டி ஆட்டோ.. கவலையே வேண்டாம்.. வாங்கி வைக்கலாம்.. JP மார்கன் சூப்பர் அட்வைஸ்!