தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். திருமணமான பிறகும் சமந்தாவின் கெரியர் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்தார்.
கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.
இந்நிலையில் தன் சம்பளத்தை ரூ. 3 கோடியாக உயர்த்திவிட்டாராம்
சமந்தா
. இதனால் நயன்தாராவை அடுத்து அதிகம்
சம்பளம்
வாங்கும் தென்னிந்திய நடிகையாகியிருக்கிறார் சமந்தா.
நயன்தாரா
படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வாங்குகிறார். சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் சூப்பர் டீலக்ஸ் ஆகும். அவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. அந்த படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
தற்போது யசோதா படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன் தோழியுடன் எங்காவது சென்று ரிலாக்ஸ் செய்துவிட்டு வருகிறார்.
Nayanthara:விக்னேஷ் சிவனை வைத்து சிம்புவை பழிவாங்கிய நயன்தாரா?