5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. மாலை 3.00 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக 4 மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.
மாநிலம் வாரியாக முன்னிலை நிலவரம் :
கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், ஆம் ஆத்மி இரு இடத்திலும், சுயேச்சை-மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
உத்தர பிரதேசம் : 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக தற்போதுவரை பெருபான்மைக்கு தேவையான இடங்களை தண்டி முன்னிலை பெற்று வருகிறது.
பாஜக 263, சமாஜ்வாதி 135, பகுஜன் சமாஜ் 1, காங்கிரஸ் 2, மற்றவை 2
பஞ்சாப் : 117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருக்கிறது.
ஆம் ஆத்மீ 91, காங்கிரஸ் 19, எஸ்.ஏ.டி 3, பாஜக 2, மற்றவை 2
மணிப்பூர் : 60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
பாஜக 30, மற்றவை 13, என்.பி.பி 9, காங்கிரஸ் 8,