உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 266 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 132 தொகுதியிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்வாதி 1 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றது.