வார்னே இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்.. வைரலாகும் இறுதி புகைப்படம்



அவுஸ்திரியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு வந்து உயிரிழப்பதற்கு முன்பாக, தாய்லாந்தில் உள்ள அவரது சொகுசு சுமுஜனா வில்லாவில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளது.

அவுஸ்திரியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த மார்ச் 04 திகதி தாய்லாந்தின் Koh Samui பகுதியில் உள்ள அவரது சுமுஜனா சொகுசு வில்லாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஷேன் வார்னே மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு அவரது தையல்காரர் பரசுராம் பாண்டேவை சந்தித்து விட்டு தனது சொகுசு சுமுஜனா வில்லாவிற்கு திரும்பி செல்லும் அவரது இறுதி சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சியில், அவர் டி-ஷர்ட் மற்றும் சிறிய ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு அவுஸ்திரியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பாக மசாஜ் செய்து கொல்லவதற்காக அவரது அறைக்கு திரும்பி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஷேன் வார்னே இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு சந்தித்த மனிதர்களில் ஒருவரான அவரது டெய்லர் பரசுராம் பாண்டே, ஷேன் வார்னேவின் இறப்பு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது, அவருக்கு உடை தயாரித்து கொடுத்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவர் தான் என்னுடைய ஹீரோ என தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே இறப்பில் மர்மங்கள் இருப்பதாக வதந்திகள் உலவிவந்த நிலையில், அதிகாலை 7 மணிக்கு ஷேன் வார்னே உயிரிழந்தாக அறிவிப்பதற்கு முன்பு அவர் அதிகாலை 5 மணியளவில் அவரது அறையில் நிலைகுலைந்து காணப்பட்டதாக ஷேன் வார்னேவின் வணிக மேலாளர் ஆண்ட்ரூ நியோஃபிடோ தெரிவித்துள்ளார்.

இதனால் ஷேன் வார்னேவை இறுதியாக சந்தித்த இரண்டு மசாஜ் பெண்களை தற்போது தாய்லாந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.      

மேலும் ஷேன் வார்னே இறப்பதற்கு முந்திய அவரது இந்த புகைப்படம் ரசிகர்களின் பெரும் சோகத்திற்கு மத்தியில் சமூகவலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.