நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவித்தல் மற்றும் நாட்டுக்கு எதிராக உண்மைக்கு எதிரான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்காமை தொடர்பில் ,எதிர்கட்சி பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல எழுப்பிய கேள்விக்கு சபை முதல்வர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரின் உடன்பாட்டுடன் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார் என்றும் சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.