புதுச்சேரி,-புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் விமான போக்குவரத்து துவக்கப்பட உள்ளது. அதில், பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு, வரும் 27ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து, கடந்த 2013ம் ஆண்டு ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம், 2015ல் ‘ஏர் இந்தியா’ நிறுவனம் பெங்களூருக்கு விமான சேவையை தொடங்கின. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், இச்சேவைகள் நிறுத்தப் பட்டன.சிறு நகரங்களை வான்வழியாக இணைக்கும் ‘உதான்’ திட்டத்தில், விமான பயணிகளின் பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்று, விமான நிறுவனங்களுக்கு அளிக்கும் என அறிவிக்கப் பட்டது.அத்திட்டத்தின் கீழ், கடந்த 2017, ஆகஸ்ட் மாதம், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத் மற்றும் பெங்களூரூக்கு விமான சேவையை தொடங்கியது. எனினும், பின்னர் பெங்களூரு விமான சேவை நிறுத்தப்பட்டது.கொரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் இல்லாமல் போனது.கடைசியாக 22.03.2020க்கு பிறகு, புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து விமானம் இயக்கப் படவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27ம் தேதி முதல், |புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்திற்கு மீண்டும் விமான சேவை துவங்க உள்ளது.இதற்காக ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 78 சீட்கள் கொண்ட ‘பம்பாடியர்’ விமானம் இந்நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது.விமான சேவை மீண்டும் துவங்குவதை தொடர்ந்து, https://book.spicejet.com என்ற இணைய தளத்தில் நேற்று முதல் விமான டிக்கெட் ‘புக்கிங்’ துவக்கப்பட்டுள்ளது.துவக்க நாளான 27ம் தேதி ஹைதராபாதில் இருந்து புதுச்சேரிக்கு வர மூன்று கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்பைஸ்சேவர் சாதாரண விமான பயண திட்டத்தில் பயணிக்க கட்டணம் ரூ.4,098.உணவு, பானங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஸ்பைஸ்மேக்ஸ் திட்டத்தில் கட்டணம் ரூ. 5,506. இலவச ஆர்.டி.பி.சி.ஆர்., டெஸ்ட், சான்ட்விச், சீட் முன்னுரிமை வசதிகளுடன் கூடிய, ஸ்பைஸ் பிளக்ஸ் திட்டத்தில் பயணிக்க 5,148 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.27ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விமான பயணிகளை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் வரவேற்க உள்ளனர்.புதுச்சேரியில் இருந்து விமான சேவைக்கான தினசரி பயண கால அட்டவணைபுறப்படும் இடம்—சேரும் இடம்—-புறப்படும் நேரம்—-சென்றடையும் நேரம்ஹைதராபாத்—புதுச்சேரி—12.05—-1.30புதுச்சேரி—-பெங்களூரு—1.50——2.50பெங்களூரு—-புதுச்சேரி—-3.20——4.10புதுச்சேரி —ஹைதராபாத்–4.30—-6.15
Advertisement