வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை உயரலாம்.. இனி மக்கள் பாடு திண்டாட்டம் தான்..!

ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15-22 வரை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எவ்விதமான கட்டுப்பாடுமின்றிச் சர்வதேச எண்ணெய் விலையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாலும், மத்திய அரசு அதிக வரி விதிக்கும் காரணத்தாலும் பல மாதங்களாகவே அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

உக்ரைன் நெருக்கடி.. இந்தியா ஐடி துறைக்கு சாதகம் தான்.. எப்படி.. ஏன்..!

 மத்திய அரசு

மத்திய அரசு

இதனிடையில் மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் பெட்ரோல், டீசல் விலையை நவம்பர் 2021ல் குறைந்தது. இதன் பின்பு 5 மாநில தேர்தலுக்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் 124 நாட்களாக இதுவரை எவ்விதமான திருத்தம் செய்யாமல் உள்ளது.

 5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இந்நிலையில் இன்று பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் மார்ச் 11 முதல் சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கச்சா எண்ணெய் விலை
 

கச்சா எண்ணெய் விலை

இன்று சர்வதேச தந்தையில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 4.53 சதவீதம் உயர்ந்து 113.62 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.15 சதவீதம் உயர்ந்து 117 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இரண்டு நாட்கள் முந்தைய நிலவரத்தின் படி OPEC கச்சா எண்ணெய் விலை 127.93 டாலராகவும், இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 126.55 டாலராக இருந்தது.

 பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

ஆந்திரப் பிரதேசம் – 87.24 ரூபாய்

அசாம் – 94.58 ரூபாய்

பீகார் – 105.90 ரூபாய்

சத்தீஸ்கர் – 101.11 ரூபாய்

குஜராத் – 95.01 ரூபாய்

ஹரியானா – 96.06 ரூபாய்

ஹிமாச்சல பிரதேசம் – 96.06 ரூபாய்

ஜம்மு மற்றும் காஷ்மீர் – 98.26 ரூபாய்

ஜார்கண்ட் – 98.48 ரூபாய்

கர்நாடகா – 100.14 ரூபாய்

கேரளா – 104.46 ரூபாய்

மத்திய பிரதேசம் – 107.25 ரூபாய்

மகாராஷ்டிரா – 107.82 ரூபாய்

ஒடிசா – 101.81 ரூபாய்

பஞ்சாப் – 94.90 ரூபாய்

ராஜஸ்தான் – 107.06 ரூபாய்

தமிழ்நாடு – 101.87 ரூபாய்

தெலுங்கானா – 108.20 ரூபாய்

உத்தரப்பிரதேசம் – 95.24 ரூபாய்

உத்தரகாண்ட் – 94.00 ரூபாய்

மேற்கு வங்காளம் – 104.67 ரூபாய்

டெல்லியின் என்.சி.டி – 95.41 ரூபாய்

 டீசல் விலை

டீசல் விலை

ஆந்திரப் பிரதேசம் – 80.21 ரூபாய்

அசாம் – 81.29 ரூபாய்

பீகார் – 91.09 ரூபாய்

சத்தீஸ்கர் – 92.33 ரூபாய்

குஜராத் – 89.00 ரூபாய்

ஹரியானா – 87.27 ரூபாய்

ஹிமாச்சல பிரதேசம் – 80.58 ரூபாய்

ஜம்மு மற்றும் காஷ்மீர் – 82.11 ரூபாய்

ஜார்கண்ட் – 91.52 ரூபாய்

கர்நாடகா – 84.60 ரூபாய்

கேரளா – 91.72 ரூபாய்

மத்திய பிரதேசம் – 90.90 ரூபாய்

மகாராஷ்டிரா – 92.47 ரூபாய்

ஒடிசா – 91.62 ரூபாய்

பஞ்சாப் – 82.63 ரூபாய்

ராஜஸ்தான் – 90.70 ரூபாய்

தமிழ்நாடு – 91.91 ரூபாய்

தெலுங்கானா – 94.62 ரூபாய்

உத்தரப்பிரதேசம் – 86.76 ரூபாய்

உத்தரகாண்ட் – 87.32 ரூபாய்

மேற்கு வங்காளம் – 89.79 ரூபாய்

டெல்லியின் என்.சி.டி – 86.67 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol price, Diesel Prices may hike from March 11, Check petrol diesel price today

Petrol price, Diesel Prices may hike from March 11, Check petrol diesel price today வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை உயரலாம்.. இனி மக்கள் பாடு திண்டாட்டம் தான்..!

Story first published: Thursday, March 10, 2022, 20:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.