ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில் அம்மாநில சட்டசபையில் பேசிய மந்திரி சான்டி தரிவால், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் மாநிலங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும்,அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ஏனெனில் இது ஆண்களின் மாநிலம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இது குறித்த வீடியோவை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பகிர்ந்துள்ளார். மந்திரியின் இந்த பேச்சிற்கு ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர் சதீஷ் புனியா மற்றும் தேசிய பெண்கள் ஆணைய தலைவி ரேகா சர்மா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து தமது பேச்சிற்கு சட்டசபையில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும், அது வாய் தவறி வந்து விட்ட வார்த்தை என்றும் ராஜஸ்தான் மந்திரி சான்டி தரிவால் கூறியுள்ளார்.
பெண்களை தாம் மதிப்பதாகவும், அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பிற்கு தாம் ஊக்கமளிப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.