ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் காரணமாக ஈரோடு முதல் கோவை வரையிலான ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும், 14ல் சோமனூர் – வாஞ்சிபாளையத்தில், பாலம் கட்டுமானப்பணி நடைபெற இருப்பதால், மார்ச், 12ஆம் தேதி புறப்பட்டு, 14ஆம் தேதி கோவை வந்து சேர வேண்டிய லோகமான்ய திலக் – கோவை விரைவு ரயில், ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், 14ஆம் தேதி புறப்படும் கோவை -லோகமான்ய திலக் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து புறப்படும் என்றும், ஈரோடு முதல் கோவை வரையிலான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.