ஹாசன்:ஹொய்சாளர் காலத்தின் அற்புதமான சிற்பங்கள் கொண்ட பேலுாரை மேலும் அபிவிருத்தி செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது.
இது தொடர்பாக ஹாசன் மாவட்ட கலெக்டர் கிரிஷ், நேற்று கூறியதாவது:வரலாற்று பிரசித்தி பெற்ற, ஹாசன் பேலுார் கர்நாடகாவின் மிகச்சிறந்த சுற்றுலா தலம். 2022 — 23 உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. விக்ரகங்கள், சிற்பங்கள் நிறைந்துள்ளன.பேலுாரை மேலும் அபிவிருத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிலின் சுற்றுப்பகுதிகளில், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வசதிக்காக, கழிப்பறைகள், தங்கும் விடுதிகள், மினி ஹெலிபேட், சாந்தலா பெயரில் நடன ஹால் உட்பட ஹைடெக் வசதிகள் செய்யப்படும்.பேலுார், ஹளேபீடு, ஸ்ரவணபெளகோலா பகுதிகளுக்கு, இணைப்பு ஏற்படுத்தும் தனிச்சாலைகள் அபிவிருத்தி செய்யப்படும். சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement