இதற்கெல்லாம் ரஜினி காரணம் இல்லை..!எல்லாம் அவர்கள்தான்…தனுஷ் ஓபன் டாக்..!

நடிகர்
தனுஷ்
தமிழ் சினிமாவில் தன் பயணத்தை துவங்கி இன்று பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராக வலம் வருகிறார்.

தற்சமயம்
வாத்தி
, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் இரண்டு பாலிவுட் படங்களிலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் தனுஷ் தன் வளர்ச்சிக்கு காரணம் தன் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும்
செல்வராகவன்
தான் என கூறியுள்ளார்.

செல்வராகவன் – சோனியா அகர்வால் பிரிவிற்கு இவர்தான் காரணமா? உருட்டா இருந்தாலும் நல்லா இருக்குயா..!

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானபோது தனுஷிற்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. அவரது தந்தையின் வற்புறுத்தலின் பெயரிலேயே நடித்தார் தனுஷ். என்னதான் அப்படம் வெற்றிபெற்றாலும் தனுஷ் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

இருப்பினும் தன் நடிப்பில் மட்டுமே தனுஷ் கவனம் செலுத்தினார். தன் அண்ணன் செல்வராகவன் இயக்கிய முதல் படமான
காதல் கொண்டேன்
தனுஷ் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. காதல் கொண்டேன் வெளியான அன்று ஒரே இரவில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என தனுஷே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு அவரை விமர்சித்தவர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு அவரது நடிப்பு இருந்தது. அதன் பின் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் இல்லாமல் இருந்தும் தனக்குள் ஒரு நடிகர் இருக்கின்றான் என கண்டுபிடித்தவர் எனது தந்தை கஸ்தூரி ராஜா.

மேலும் அந்த நடிகனை தன் இயக்கத்தின் மூலம் மெருகேற்றியவர் செல்வராகவன். எனவே இவர்கள் தான் என் வளர்ச்சிக்கு முழு காரணம். ரஜினியின் மருமகன் என்பதால் எனக்கு எந்த வளர்ச்சியம் ஏற்படவில்லை. ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்துதான் கிடைத்தது. எனவே என் வளர்ச்சிக்கு என் திறமையும், என் தந்தை மட்டும் அண்ணனே காரணம் என கூறியுள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.