பெர்லின்,
ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 2013ஆம் ஆண்டு உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொண்டார்.
முதல் செட் ஆட்டத்தை சாய்னா 21-10 என இழந்தார். ஆனால் அடுத்த செட்டை போராடி கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது செட் ஆட்டத்தில் சாய்னாவுக்கு கடும் சவால் அளித்த ரட்சனோக் அந்த செட்டை 21-15 என கைப்பற்றினார்.
இதன் மூலம் சாய்னா, 31 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 21-10, 21-15 என்ற நேர் செட்டில் ரட்சனோக் இன்டனானிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.