விஷ்ணு விஷாலின் ‘எஃப்ஐஆர்’ ஓடிடியில் நாளை வெளியாகிறது.
விஷ்ணு விஷால்-மஞ்சிமா மோகன் நடிப்பில் ’எஃப்.ஐ.ஆர்’ கடந்த மாதம் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மனு ஆனந்த் இயக்கிய இப்படத்தில் கெளதம் மேனன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அஷ்வத் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இப்படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இப்படத்தின், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது.
படம் வெளியாகி ஒரு மாதம் ஆவதால் மார்ச் 12 ஆம் தேதி நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதனை உற்சாகமுடன் அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.