`நீ நடிகையாகப் போகிறாய்…' கங்கனா ரனாவத் தன்னைப் பற்றி பிரபாஸிடம் சொன்ன ஜோதிடரின் கணிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டையொட்டி நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ் ஏக் நிரஞ்சன் ( Ek Niranjan) படப்பிடிப்பில் கங்கனா ரணாவத் தன்னிடம் சொன்ன சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

பிரபாஸ்

சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த நடிகை கங்கனா ரணாவத் சிறுவயதில் ஒரு ஜோதிடரைச் சந்தித்ததாகவும் அப்போது அந்த ஜோதிடர் கங்கனா பிற்காலத்தில் ஒரு பெரிய நடிகையாக வருவார் என்றும் கூறினாராம். அந்த நேரத்தில் இதுபோன்ற ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லாத கங்கனா, தன்னை ஏமாற்றுவதற்காக இப்படியெல்லாம் கூறுகிறார்கள் என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால் பிற்காலத்தில் அவர் பிரபல நடிகையான பின்பு இதை நினைத்து ஆச்சர்யப்பட்டதாக நடிகர் பிரபாஸிடம் கூறியிருக்கிறார். இந்த தகவலைப் பகிர்ந்துகொண்ட நடிகர் பிரபாஸ் ராதே ஷியாம் படத்தில் ஜோதிடராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.