மக்களின் நம்பகமான பிராண்டு.. இந்தியாவில் எல்ஐசி-க்கு முக்கிய இடம்.. இது சூப்பர்ல்ல!

இந்திய மக்களின் நன்மதிப்பினை பெற்ற நம்பகமான பிராண்டுகளின் பட்டியலில் எல்ஐசி முக்கிய இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, விரைவில் அதன் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளீயீட்டினை வெளியிடவுள்ளது.

இந்த சமயத்தில் இந்த அறிவிப்பானது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக வந்துள்ளது.

மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா?

6வது இடத்தில் எல்ஐசி

6வது இடத்தில் எல்ஐசி

டிஆரே-வின் (TRA’s Brand Trust Report (BTR) 2022) 11வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கமாக கடந்த மூன்று வருடமாக முதல் இடத்தை பெற்ற டெல் நிறுவனமே, நடப்பு ஆண்டும் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்த லிஸ்டில் 6வது இடத்தில் எல்ஐசி இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 234.90 கோடி ரூபாய் லாபத்தினை பெற்றிருந்ததது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 94 லட்சமாக இருந்தது நினைவுகூறத்தக்கது.

2வது இடம் & 3வது இடம்

2வது இடம் & 3வது இடம்

அதேபோல தொடர்ந்து இரண்டாவது இடத்தில் Mi மொபைல் உள்ளது. இதே மூன்றாவது இடத்தில் சாம்சங்-ம் உள்ளது. முதல் 3 இடங்களையும் வழக்கமாக அதே நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒரே குழுமத்தினை சேர்ந்த 36 பிராண்டுகள் இந்த ஆண்டு அறிக்கைக்குள் இடம்பெற்றுள்ளன.

4வது இடத்தில் எல்ஜி
 

4வது இடத்தில் எல்ஜி

அதேபோல எல்ஜி நிறுவனம் முந்தைய ஆண்டினை விட ஒரு இடம் முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு எல்ஜி நிறுவனம் 4வது இடத்தை பிடித்துள்ளது. அமேசான் நிறுவனம் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமேசான் கடந்த ஆண்டினை காட்டிலும் 11 இடங்கள் முன்ணேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைட்டன் எத்தனையாவது இடம்

டைட்டன் எத்தனையாவது இடம்

4 சக்கர பிரீமிய வாகன நிறுவனமான பிஎம்டபள்யூ (BMW) 7வது இடத்தில் உள்ளது. இதுவும் கடந்த ஆண்டினை காட்டிலும் 12 இடங்கள் முன்னேறியுள்ளது.

இந்த பட்டியலில் டாடா குழுமத்தினை சேர்ந்த டைட்டன் நிறுவனம் 32 இடங்கள் முன்னேறி 8வது இடத்தினை பிடித்துள்ளது. லெனோவா லேப்டாப் 63 இடங்கள் முன்னேறி 9வது இடத்தினையும் பிடித்துள்ளது. இதே 10வது இடத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ( நுகர்வோர் பிரிவு) இடம் பெற்றுள்ளது.

10-க்கு மேல்  எந்தெந்த நிறுவனங்கள்?

10-க்கு மேல் எந்தெந்த நிறுவனங்கள்?

இதில் சோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஹிந்தி – GEC 4 இடங்கள் குறைந்து 11வது இடத்தையும், இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா 12வது இடத்தினையும் பிடித்துள்ளன, இதே டாடா சால்ட் 13வது இடத்தையும், டாடாவின் பிராண்டான தனிஷ்க் 14வது இடத்தையும், சோனி 15வது இடத்தையும் பிடித்துள்ளது.

சரிவினைக் கண்ட நிறுவனங்கள்

சரிவினைக் கண்ட நிறுவனங்கள்

சாம்சங் டெலிவிஷன் மற்றும், ஆப்பிள் ஐபோன், எல்ஜி ரெஃப்ரிஜிரேட்டர்கள், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டினை காட்டிலும் சரிவினைக் கண்டுள்ளன. டி ஆர் ஏ-வின் நம்பகமான பிராண்டுகளில் 1000 பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன,

 குழும பிராண்டுகள்

குழும பிராண்டுகள்

இந்த அறிக்கை குறித்து டிஆர்ஏ ஆய்வு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான என் சந்திரமெளலி, இந்த ஆண்டு அறிக்கை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் சற்று வேறுபட்டது. சில குழும பிராண்டுகள் மற்றவர்களை காட்டிலும் அதிக இடங்களை பெற்றுள்ளா, இதி முதல் முறையாக 36 டாடா பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன. கோத்ரேஜ்ஜின் பிராண்டுகளும், ரிலையன்ஸின் 7 பிராண்டுகளும் இடம்பெற்றுள்ளன

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC at sixth place in most trusted brand list in 2022

LIC at sixth place in most trusted brand list in 2022/மக்களின் நம்பகமான பிராண்டு.. இந்தியாவில் எல்ஐசி-க்கு முக்கிய இடம்.. இது சூப்பர்ல்ல!

Story first published: Friday, March 11, 2022, 17:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.