வாஷிங்டன்:
ஈரான் நாடு எண்ணெய் வளம் மிக்க நாடு. ஈரானில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க முறித்து கொண்டது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியாவது தடைபட்டது. எண்ணெய் வியாபாரம் தான் முக்கிய பொருளாதாராம் என்பதால் அதனை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருகிறது.
இந்த நிலையில் ஈரான் நாட்டில் இருந்த வந்த 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனுடன் ரஷியா போரிட்டு வருவதால், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் அமெரிக்காவில் குறைந்துள்ளது. இந்த சமயத்தில் இந்த எண்ணெய் கப்பல் பிடிபட்டுள்ளது. இதனை ஈடுசெய்வதற்கு ஈரானுடனான தடைகளில் சிலவற்றை தளர்த்த அமெரிக்கா முயன்று வருவதாக கூறப்படுகிறது.