உக்ரைன் ஒருபோதும் புதினுக்கு வெற்றியைத் தராது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் கொலம்பிய அதிபர் இவான் டுக் மார்க்வெஸ், பைடனைச் சந்தித்துப் பேசினார். அப்போது கொலம்பியாவை நேட்டோ அல்லாத முக்கிய கூட்டாளியாக பைடன் அறிவித்தார். இதனால் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் கொலம்பியா முன்னேறும் என்று குறிப்பிட்டார்.
மேலும் ரஷ்யாவைக் கண்டித்ததற்காக மார்க்வெஸ்ஸை அவர் பாராட்டினார். தொடர்ந்து கொலம்பியாவில் புலம் பெயர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளையும் பைடன் வழங்கினார்.