உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் (gas masks) கைப்பற்றப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புகைப்படங்களில், ரஷ்ய வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் நச்சு வாயு முகமூடிகள், நச்சு வாயுவிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் இரண்டாம் உலகப்போர்க்கால தலைக்கவசங்கள் முதலானவை அடங்கியிருப்பதைக் காணலாம்.
ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், உக்ரைன் ஜனாதிபதியும் புடின் ரசாயன ஆயுதங்களைக் பயன்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ள நிலையில், தற்போது ரஷ்ய வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், உண்மையாகவே ரஷ்யா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற கருத்து உருவாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும், பிரித்தானிய உளவுத்துறை தலைவரும்கூட, ரஷ்யா சீக்கிரம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என கவலை தெரிவித்துள்ளனர்.