கடந்த 2019-ம் ஆண்டின் கடைசியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளையே ஒரு ஆட்டம் காணச் செய்துவிட்டது. பல லட்சம் மக்களின் உயிரிகளை பறித்த இந்த கொலைகார கொரோனா மீண்டும் சீனாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமடைந்து வருகிறது. தற்போது வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பல ஆயிரம் பேர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களுக்கு பின் மரணம்!
கிட்ட தட்ட 90 லட்சம் பேர் வசிக்கும் இந்த மாகாணமே தற்போது லாக் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாதபடி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாங்சுன், ஜில்லின், ஷாங்காய் என பல முக்கிய மாகாணங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொற்று அதிகரிப்பதை அடுத்து கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க | ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான கிருமிகளை அழிக்க உக்ரைனுக்கு WHO அறிவுறுத்தல்
சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 255 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 194 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாகாணங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஷாங்காய் முடங்கியுள்ளதால் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சீன பொருளாதார நிபுணர்கள் குழு, மீண்டும் லாக்டவுன் வந்தால் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.