சென்னையில் இன்று பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தலைமை விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், ” பெண்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது.
இதற்கு காரணம் பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருப்பது தான். பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவது மிக முக்கியமான விஷயம். இதை கருத்தில் கொண்டு தான் பிரதமர் மோடி முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களின் நலனுக்காக தொடங்கியுள்ளார்.
பெண்கள் தொழிலில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றுதான் இதுபோன்ற திட்டங்கள் அமலுக்கு வந்தது. உஜ்வாலா திட்டத்தின் மூலமாக சமையல் எரிவாயு, வீட்டுவசதி உரிமைகளை பெண்களுக்கு மத்திய அரசு அளித்து இருப்பது கவனிக்கத்தக்கது.
உடைகள் அணிவதில் நமக்கு சுதந்திரம் தேவை என்றாலும் கூட இந்த உடை சுதந்திரம் கூட பொருளாதார அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இருப்பினும், நமது பாரம்பரியத்தை காக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.