திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரக் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்துக் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக வங்கித் தலைவர், மேலாளர் உள்ளிட்ட 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரே பெயர்களில் பலமுறை போலி நகைகளை அடகு வைத்துக் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியதில் மொத்தம் இரண்டு கோடியே 30 இலட்ச ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பீட்டாளர் மோகன், வங்கித் தலைவர் அசோக்குமார் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.