ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு எதிரான வன்முறை, வெறுப்பு பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான எந்தவிதமான பதிவுகளையும் சகித்துக்கொள்ள மாட்டோம் என கூறி அவற்றை அவ்வப்போது ஃபேஸ்புக் நிறுவனம் அகற்றி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிற நாட்டு தலைவர்களுக்கு எதிரான பதிவுகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக் பதிவுகளை தணிக்கை செய்யும் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.