பாலா – முத்துமலரை சேர்த்து வைக்க பாடுபட்ட சிவக்குமார்: கடைசியில் நடந்தேறிய சோகம்..!

இயக்குநர் பாலாவுக்கும், தேனியை சேர்ந்த முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரார்த்தனா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து
பாலா
,
முத்துமலர்
இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுள்ளர்.

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்கள் திடீரென தங்கள் விவாகரத்தை அறிவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இமான் உள்பட ஒருசில சமீபத்தில் தங்கள் துணையை விவாகரத்து செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

கடந்தாண்டு காதல் திருமணம் செய்த நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களின் விவகாரம் அடங்கும் முன்பே தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் டி. இமான் தனது விவாகரத்து முடிவை அறிவித்தார்.

மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பித்த சிம்பு: அப்செட்டில் பிரபல தயாரிப்பாளர்..!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பி இயக்குனர் பாலா, முத்துமலரை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார். இவர்களின் டைவர்ஸ்க்கு முன்பாக இருவரையும் சேர்த்து வைக்க சூர்யாவின் தந்தை
சிவக்குமார்
பெரிதும் முயற்சி செய்தததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பேர் இடையிலும் சிவக்குமார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் பிரிய வேண்டும் என்ற தங்களின் முடிவில் பிடிவாதமாக இருந்து இறுதியாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

பாலா, முத்து மலரை குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரிலே திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், முத்து மலர் காலேஜ் படிக்கும் போதே பிரபல அரசியல் கட்சியின் முன்னணி தலைவரின் மகனை காதலித்து வந்துள்ளதாகவும், அவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.