உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வெளியேறியிருப்பதாக யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் காரணமாக குழந்தைகளுடன் உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் யுனிசெப் இதனை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிசெப் உதவிகளை வழங்கி வருகிறது. இதுவரை யுனிசெஃப் அனுப்பிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு கருவிகள் அடங்கிய சுமார் 70 டன் பொருட்களுடன் 6 டிரக்குகள் உக்ரைனுக்கு வந்தடைந்துள்ளன.
அவை போரால் பாதிக்கப்பட்ட 5 வெவ்வேறு பகுதிகளில் உள்ள 22 மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.