அகமதாபாத்:
தமது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தொடங்கி சாலை வழியே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது சாலைகளில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, புதிதாக வடிவமைக்கப்பட்ட காவி வண்ண தொப்பியை அணிந்திருந்தார்.
குஜராத்தில் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அம்மாநில பாஜக நிர்வாகிகளும் இந்த தொப்பியை அணிந்திருந்தனர்.இது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. குஜராத் பாஜக இந்த தொப்பியை தயாரித்துள்ளது.
காவி நிறத்தில் உள்ள தொப்பியின் மீது மெல்லிய எம்பிராய்டரி போடப்பட்டு அதில் பஜாப் (குஜராத்தி) என்று பொறிக்கப்பட்டுள்ளது.
தொப்பியின் மையத்தில் பாஜகவின் சின்னமாக தாமரை பொருத்தப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதுபோன்ற 30,000 தொப்பிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம், மேலும் தேவை அதிகரிக்கும் போது, நாங்கள் ஆர்டர் செய்வோம், என்று குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் அதன் தலைவர் அகிலேஷ் உள்பட தொண்டர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சிவப்பு நிற தொப்பியை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்..
அமைச்சர் பதவிக்கு ஏங்க கூடாது – பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு, பகவந்த் மான் வலியுறுத்தல்