உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வென்றுள்ள நிலையில் முதலமைச்சர் தேர்வில் அக்கட்சி தற்போது தீவிரம்காட்டி வருகிறது.
70 இடங்களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் 47 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஆனால் காட்டிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இந்நிலையில் தாமிக்கே மீண்டும் வாய்ப்பு தரலாமா அல்லது வேறு மூத்த தலைவர்களில் ஒருவரை முதல்வர் நாற்காலியில் அமரவைக்கலாமா என பாஜக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் உத்தராகண்ட் செல்வார்கள் எனத் தெரிகிறது.
உத்தராகண்ட்டில் அபார வெற்றிபெற்றும் முதலமைச்சர் தேர்வு செய்யப்படாமல் இருப்பதால் ஆட்சியமைப்பதும் தாமதமாகி வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சிக்காலத்தில் 3 முதலமைச்சர்கள் மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM