இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு பெற்றது.!

யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில்இருந்து குறைவான பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். காலை திருப்பலி முடிந்தவுடன் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.‌ இதனை தொடர்ந்து இருநாட்டு பக்தர்களும் தனது சொந்த ஊருக்கு  படகுகளில்   புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட 76 பக்தர்கள் இன்று மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு வருவார்கள். மேலும் இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, ஒய்வுபெற்ற கடற்படை தளபதி அட்மிரல் விஜேகுணரட்ண, யாழிற்க்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி மற்றும் மதகுருமார்கள், கடற்படை இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.