ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த வோட்கா மதுபானம், கடல் உணவு, வைரம் உள்ளிட்ட வர்த்தகத்தை தடை செய்து அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அதிபர் பைடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு அதிபர் புதின நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும் என்றார். ஐரோப்பிய ஒன்றியம், ஜி 7 மற்றும் ஐரோப்பியாவின் நட்பு நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தப் போவதாக தெரிவித்தார்.
மறைமுகமாக ரஷ்யாவுக்கும், அதிபர் புதினுக்கு பண உதவி முதல் அனைத்து உதவிகளையும் செய்து வரும் அந்நாட்டு தொழிலதிபர்களின் சொத்துகளை முடக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக பைடன் தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் ஆடம்பர பொருட்களையும் தடை செய்வதாக பைடன் தெரிவித்தார்.