டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி, வெற்றிபெற்ற பூரிப்பில் தென்மாநிலங்களில் கட்டமைப்பை வலுப்படுத்த களமிறங்குகிறது.
தெலங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஆட்சி மற்றும் பஞ்சாப் வெற்றியைக் கண்ட தென்மாநில மக்கள் அக்கட்சியில் சேர ஆர்வம் காட்டுவதாக சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார. இதுவரை இல்லாத வரவேற்பு தென்னிந்தியாவில் இருந்து கிடைத்து வருவதாகக் கூறிய அவர், கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM