ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு ஆடம்பரப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில மதுபானங்கள், புகையிலைப் பொருட்கள், ஆடைகள், நகைகள், வாகனங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களின் ஏற்றுமதி, மற்றும் பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீதான போர் ஐரோப்பா கண்ட மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்று எனவும் விமர்சித்துள்ளது.
மேலும் ரஷ்ய மக்களைச் சுரண்டுவதன் மூலம் புதினும் அவரைச் சார்ந்தவர்களும் பெரும் பணக்காரர்களாகி விட்டதாகவும், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை நினைவூட்ட விரும்புவதாகவும் அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ கூறியுள்ளார்.