உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய இராணுவ வீரர்களின் டாங்குகள் உக்ரைன் வீரர்களால் துவம்சம் செய்யப்பட்டு, ரஷ்ய வீரர்கள் பின்வாங்கி ஓடிய சம்பவம் ஒன்று உலகின் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், அந்த ரஷ்ய வீரர்கள் வேண்டுமென்றே வலிய வந்து உக்ரைன் வீர்ர்களிடம் சிக்கிக்கொண்டார்களா என இராணுவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ரஷ்ய இராணுவத்தின் போர் யுக்தியால் தாங்கள் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிபுணர்கள், Kyivக்கு செல்லும் சாலையின் நடுவில் ரஷ்ய இராணுவ டாங்குகள் சென்றது, நேரே சென்று உக்ரைன் வீரர்களிடம் சிக்கிக்கொள்வதற்கு சமம் என்றும், அவர்கள் எதனால் அப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இதற்கிடையில், மொத்த ஜேர்மன் இராணுவத்துக்கு இணையான டாங்குகளை ரஷ்ய படைகள் இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இராணுவ நிபுணரான Rob Lee என்பவர் கூறும்போது, ரஷ்ய படைகள் மிக மோசமான யுக்திகளைப் பின்பற்றியதாக விமர்சித்துள்ளார்.
சரியாக, உக்ரைன் படைகளால் தாக்கப்படும் இடத்தில் ரஷ்யப் படைகளின் டாங்குகள் நின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரித்தானிய இராணுவத் தளபதி ஒருவரும், நாங்கள் போர்ப் பயிற்சி பெறும்போது எந்த ரஷ்ய இராணுவத்தை எதிர்த்துப் போரிட பயிற்சி பெற்றோமோ, அந்த ரஷ்ய இராணுவம் அல்ல இது என விமர்சித்துள்ளார்.
Kyivக்கு செல்லும் சாலையின் உக்ரைன் வீரர்களால் ரஷ்யப் படைகள் துவம்சம் செய்யப்பட்ட அந்த தாக்குதலில் ரஷ்ய தளபதி ஒருவரும் கொல்லப்பட்டதுடன், ரஷ்யா தரப்பு மூன்று முக்கிய தளபதிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.