குவஹாத்தியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில், 2021-22 ம் நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.10% ஆக குறைக்க பரிந்துரைப்பட்டதாக, இரண்டு வாரிய உறுப்பினர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர். இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த வட்டி விகிதமாகும்.
EPFO வாரியம் கடந்தாண்டு மார்ச் மாதம், 2020-21 நிதியாண்டிற்கான 8.5 சதவீத வட்டி விகிதத்திற்கான பரிந்துரையை இறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய வாரிய குழு கூட்டமானது, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து கலந்தாலோசிக்க முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் தரப்பில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் பரிந்துரை, பின்னர் நிதி அமைச்சகத்தால் இறுதிச்செய்யப்படும்.
EPFO, 2020-21 ஆம் ஆண்டிற்கான பிஎஃப் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் வைத்திருந்தது. இதே வட்டி விகிதம் தான், 2019-20 நிதியாண்டிலும் பின்பற்றப்பட்டது.
கொரோனா தொற்றால் அமலுக்கு வந்த ஊரடங்கு சமயத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கணிசமான பணத்தை திரும்பப் பெற்ற நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய காலத்திலும் அதிக பணம் திரும்பப் பெறுதல் மற்றும் குறைந்த பிஎஃப் பங்களிப்புகளே முதலீடு செய்வதை ஓய்வூதிய நிதி அமைப்பு கவனத்திற்கு வந்தது.
டிசம்பர் 31 ஆம் தேதி வரை, முன்கூட்டிய பணம் பெறும் வசதியின் கீழ் வழங்கப்பட்ட ரூ.14,310.21 கோடி மதிப்பிலான 56.79 லட்சம் கோரிக்கைகளை EPFO தீர்த்துள்ளது.
குறிப்பிட தகுந்த அளவில் உயர்ந்த வட்டி விகிதம் கொண்ட வருங்கால வைப்பு நிதி குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே நிதியமைச்சகம் கேள்வி எழுப்பி வந்துள்ளது.சூழலுக்கு ஏற்ற மொத்த வட்டி வகிதத்திற்கு ஏற்ப வட்டி வகிதித்தை 8 சதவிகிதத்திலிருந்து குறைக்க திட்டமிட்டுவருகிறது.
மற்ற சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஃப் வட்டி விகிதம் அதிகளவில் இருந்தது. சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 4.0 சதவிகிதம் முதல் 7.6 சதவிகிதம் வரையே இருக்கும். ஒட்டுமொத்த சந்தை விகிதங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும், சமீபத்திய காலாண்டுகளில் வட்டி விகிதம் மாற்றப்படாமல் வைக்கப்பட்டிருந்தன.
நிதி அமைச்சகம், 2019-20 வட்டி விகிதம் மற்றும் 2018-19 நிதியாண்டின் வட்டி விகிதமான 8.65 சதவிகிதத்தை குறித்தும் கேள்விஎழுப்பியது குறிப்பிடத்தக்கது.