ஹாமில்டன்,
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது.ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 107 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது உலக கோப்பை தொடரில் அவருடைய 4-வது சதமாகும்.
அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். இதனால் இந்திய அணி 300 ரன்களை கடந்து சிறப்பான ஸ்கோரை எட்டியது.