சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த அமெரிக்கை வி.நாராயணனை இனி விவாதங்களில் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கும், தலைமைக்கும் விரோதமாக பொது வெளியில் ஊடகங்களின் வாயிலாக கருத்துக்களைத் தெரிவித்து வருவதால், அமெரிக்கை வி.நாராயணன் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க இனி அவரை அழைக்க வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில், அமெரிக்கை வி.நாராயணனின் கட்சி விரோத நடவடிக்கை குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.