டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர் மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 16ல் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.