80க்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்த மரியூபோலில் உள்ள மசூதி மீது ரஷ்யா குண்டு வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பிற்காக பதுங்கியிருந்த மரியுபோலில் உள்ள சுல்தான் சுலைமான் மசூதி மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த துருக்கியில் உள்ள உக்ரைன் தூதரகம், 34 குழந்தைகள் உள்பட துருக்கியைச் சேர்ந்த 86 பேர் அந்த மசூதியில் தஞ்சமடைந்ததாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.