டெல்லி: கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி விலக உள்ளதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி விலகல்? என தகவல் வெளியானது. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சித்தலைமை தெரிவித்தது. இந்தக் கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் 5 மாநில தேர்தலில் தோல்வி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர் தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில், காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை காங்கிரஸ் கட்சித்தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி விலக உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.