முதுநிலை மருத்துவ படிப்பு கட் – ஆப் மதிப்பெண் குறைப்பு

புதுடில்லி:முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ தேர்வு ‘கட் – ஆப்’ மதிப்பெண்ணை மத்திய அரசு குறைத்துள்ளது.

நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலை, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், எம்.டி., – எம்.எஸ்., என்ற பட்ட மேற்படிப்புகளுக்கு, தமிழகத்தில் 4,000 இடங்கள் உட்பட, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், 2022 – 23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே, அனைத்து வகையான பிரிவினருக்கும், கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15ம் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்ககம், தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம்:அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதன்படி, பொது பிரிவினருக்கு 35; பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 30; ஓ.பி.சி., – எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு 25 என மதிப்பெண் விகிதம் இருக்கும். குறைக்கப்பட்ட கட் – ஆப் மதிப்பெண் விகிதம் அடிப்படையில், புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.