காந்திநகர்: பிரதமர் மோடி நேற்றிரவு தனது தாயுடன் உணவு சாப்பிட்டார். இன்று நடைபெறும் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார். இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று அகமதாபாத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக அகமதாபாத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரையிலான சாலை பேரணியில் கலந்து கொண்டார். மேற்கண்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காந்திநகரில் உள்ள அவரது தாயார் ஹீராபென்னை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் தனது தாயுடன் இரவு உணவு சாப்பிட்டார். இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின் அவர் தலைநகர் டெல்லி திரும்புவார்.