மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு.. ! விருது பெறுவோர் பட்டியல்.!

சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் 3வது நாள் மாநாடு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இதில், “முதல்வரின் முகவரி” உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி செய்த மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் 3 மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன் தினம் (மார்ச் 10ந்தேதி) கூடியது. மூன்றாவது நாளாக  இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனத்துறை அலுவலர்கள் அலுவலகர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் முடிவில்,  மாவட்டங்களில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி செய்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளின் சார்பாக கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகின்றது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

முதலமைச்சரை உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கை மேற்கொண்டதாக முதல்வரின் முகவரி முதல் விருது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியருக்கு இரண்டாவது விருது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப் படுகிறது.

2021ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மிக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா வுக்கும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டிக்கும் வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் முதல் இடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் இடம் தேனி மாவட்டத்திற்கு மூன்றாமிடம் நாமக்கல் மாவட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு தொடர்பான நலத் திட்டங்களுக்காக 2021 2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலிடம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்க்கும், இரண்டாம் இடம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்-க்கும், மூன்றாமிடம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கும், வழங்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு சிறந்த மாவட்டத்துடன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்காக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் முதலிடம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கும், இரண்டாமிடம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கும், மூன்றாவது இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கப் பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அமைப்பான ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை அமைப்பின் மூலம் நீலக்கொடி திட்டத்தின்கீழ் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை டென்மார்க் மூலம் பெறப்பட்ட உலகப்புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரையை சுத்தமான சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான நீலக்கொடி கடற்கரையாக பராமரிப்பு செய்வதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.