3 வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு, மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் இன்று காலை புழல் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், சி.வி சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், ஜெயக்குமாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.