தன்னுடைய நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லை தனித்து செயல்படுவதாக தாம்பரம் மேயர் தெரிவித்தார்.
சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
மேயரின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என கேட்டதற்கு, தான் தனித்து, சுதந்திரமாக செயல்படுவதாகவும், யாருடைய தலையீடும் இல்லை, என்றார்.
சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியை உருவாக்க திட்டமிடல் குறித்து கேட்டதற்கு:
சென்னை மிகவும் பழமையான மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி தற்போது பிறந்த குழந்தை, மண்டல தலைவர்களை வைத்து முதலில் பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் குடியிருப்பு சங்கங்களை ஒருங்கிணைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM