மார்ச் 14ல் வெளியாகும் பபூன் டீஸர்
நடிகர் வைபவ் தற்போது பாரி கே விஜய் இயக்கத்தில் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு பிறகு அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' என்ற புதிய படத்தில் வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக அனகா நடிக்கிறார் . ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார் .சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. பபூன் பட டீசர் வரும் மார்ச் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.