கொல்கத்தாவின் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீயால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் உயிர்ச்சேதம் ஏதுமில்லாமல் தீயணைப்பு வீரர்கள் இரவெல்லாம் 10 மணி நேரமாகப் போராடினர்.
தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 15 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறுகிய வாசல் காரணமாக உள்ளே புக முடியாதவாறு தீயும் புகையும் சூழ்ந்திருந்ததால் தீயை அணைப்பதில் தாமதம் ஆனது.