புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக தற்போது வரை 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள் 2022ல் புதிய திருத்தத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் விரும்பும் பட்சத்தில் மக்கள் தொகை விவரங்களை சுயமாக ஆன்லைனிலேயே சமர்பிக்க முடியும். அதே சமயம் முந்தைய நடைமுறைப்படி வீடுவீடாக அலுவலர்கள் வந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியையும் மேற்கொள்வார்கள். பொதுமக்களே மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு ஆன்லைனில் பதிலை நிரப்பி, அவற்றை சுயமதிப்பீடு செய்து சமர்பிக்கலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.